யோகிபாபுவின் கீழ்தனமான செயல்.. இதுக்கு வடிவேலு எவ்வளவோ பரவா இல்லையே

கடந்த ஆண்டு வெளியான முக்கால்வாசி படங்களில் யோகிபாபு தான் நடித்திருந்தார். தற்போது முன்னணி ஹீரோக்களை விட இவர் தான் பிசியாக உள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு, ஏழு படத்திற்கு சூட்டிங் செல்லும் அளவிற்கு பிஸியாம். தற்போது ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடும் போல யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.

மேலும் வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க ரெக்கார்ட் தடை விதிக்கப்பட்டதால் தற்போது யோகிபாபு வடிவேலின் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார். யோகி பாபு போறபோக்கில் அசால்டாக அடிக்கும் காமெடிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ஒரு சில படங்களில் யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கு ஒரு படி மேலாக தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் யோகி பாபு. அதுவும் அட்லி இயக்கும் லயன் படத்தில் ஷாருக்கான் உடன் நடிக்கிறார். இந்நிலையில் வடிவேலு டெக்னிக்கை தற்போது யோகி பாபு ஃபாலோ செய்து வருகிறாராம். அது ஒரு கீழ்த்தரமான டெக்னிக் ஆகும்.

அதாவது வடிவேலு நடித்த காலத்தில் அவருடன் அசிஸ்டன்ட் ஆக வேலைபார்க்கும் நபரின் சம்பளத்தையும் தயாரிப்பாளரிடமிருந்து வடிவேலு தான் பெற்றுக்கொள்வாராம். அசிஸ்டண்ட்க்கு ஒரு சொற்ப தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தை வடிவேலுவே வைத்துக் கொள்வாராம்.

அதேபோல் தற்போது யோகி பாபு அசிஸ்டன்ட் வாங்கும் சம்பளத்தை மொத்தமாகச் இவரே வாங்கிக்கொண்டு 500 அல்லது 1000 மட்டுமே அவருக்கு கொடுக்கிறாராம். மீதி பணத்தை யோகிபாபுவே ஆட்டையை போட்டு கொள்கிறாராம். இதற்கு வடிவேலை பரவாயில்லை என பலர் கூறுகின்றனர்.

மேலும் இது யோகிபாபுவின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இதே போன்று தொடர்ந்து செய்து வந்தால் வடிவேலுவைப் போல இவரது மார்க்கெட்டும் இறங்கிவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் ஒரு வருஷத்துக்கு இத்தனை படங்கள் நடிக்கும் யோகி பாபுக்கு ஏன் இந்த அல்ப புத்தி என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.