விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எதிர்பார்த்தபடி ரசிகர்கள் மத்தியில் இன்னமும் வரவேற்பு பெறவில்லை. போன சீசனும் இதேபோல்தான் ரசிகர்களை சோதனையில் ஆழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த முறை சொல்லவே வேண்டாம். உப்பு சப்பு இல்லாத போட்டியாளர்கள்.

முதல் மூன்று சீசன்களில் நல்ல நல்ல போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து நல்லவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்த விஜய் டிவி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக ஆட்களை தேர்வு செய்வதில் பயங்கரமாக சொதப்பி வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத பலரையும் களமிறக்கியது தான் இந்த நிகழ்ச்சியின் மீதான சுவாரசியத்தை குறைத்துள்ளது.

அந்த வகையில் களமிறங்கிய போட்டியாளர்களில் ஒருவரான நிரூபி என்பவர் ரசிகர்களுக்கு தற்போது வரை யார் என்பதே தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது. திடீரென இவர் எல்லாம் எங்கிருந்து வந்தார் என்கிற அளவுக்கு தான் மக்களிடம் அவருக்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால் அவர் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட யாஷிகா மற்றும் அபிராமி ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பது பலருக்கும் தெரியாது.

ஒருமுறை யாஷிகா வெளியிட்ட வீடியோவில் போகிறபோக்கில் அவருக்கு லிப் கிஸ் அடித்த ஒரு ஆண் பற்றி அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. யார் யாருக்கு முத்தம் கொடுத்தவர் என தேடிய போதும் அவரைப் பற்றிய பெரிய தகவல்கள் இல்லை. ஆனால் அவர்தான் இந்த நெருப்பு என்பது இப்போதுதான் தெரியவருகிறது.

அதே போல் அபிராமி உடன் மிக நெருக்கமாக கட்டிக்கொண்டு அவர் எடுத்துள்ள புகைப்படம் கூட தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மாடல் என்பதால் இவரும் பார்ப்பதற்கு செம ஹேண்ட்சம் ஆக உள்ளார். தற்போது இவருக்கும் அபிராமி க்கும் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருவது இணையத்தில் தெரிகிறது.

இந்த செய்திக்குப் பிறகு கண்டிப்பாக நிரப்பி ரசிகர்கள் மத்தியில் யாஷிகாவின் பாய்பிரண்ட் ஆகவோ அல்லது அபிராமியின் நண்பராகவோ பரிட்சயம் அடைய வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் இவர்கள் இருக்கும் நெருக்கத்தை பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் வயிறு எரிய தான் செய்கிறது.