யாஷிகாவிற்கு லிப்-டூ-லிப் கிஸ் அடித்த பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்! நேரலையில் ரசிகர்கள் கண்ட

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்த பலரும் தற்போது வெள்ளத்திரையில் ஜொலித்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் சந்தித்து, பழகி, தற்போது நெருங்கிய தோழிகளாக உள்ளனர். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசனின் மூன்றாவது நிகழ்ச்சி முடிவு பெற்ற நிலையில் தாங்கள் இருவரும் நட்பாகி ஓராண்டுகாலம் ஆகிவிட்டதை பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளனர்.

அந்த பார்ட்டியின் போது நடிகை யாஷிகா ஆனந்தும், ஐஸ்வர்யா தத்தாவும், தங்களின் ரசிகர்களுடன் வலைதளத்தில் லைவாக வந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் இருந்த ஆண் நண்பர் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த் பேசிக்கொண்டு இருப்பதைப் பொருட்படுத்தாமல் அவரை கட்டி இழுத்து லிப் டூ லிப் கிஸ் அடித்துள்ளார்.

இந்த ஆண் நண்பர் நடிகை யாஷிகா ஆனந்த் உடன், அவருடைய தோழி ஐஸ்வர்யா தத்தா இருப்பதையும், அதே சமயம் இவர்கள் லைவ் நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதையும் கூட பொருட்படுத்தாமல் இவ்வாறு நடந்துகொண்டது அனைவரின் முகமும் சுழிக்கும்படி செய்தது.

அந்த வீடியோவில் இருக்கும் ஆண் நண்பரை தற்போது ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்தை கிஸ்சடிச்ச அந்த ஆண் நண்பர், விஜய் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் தான். அந்த வீடியோவில் யாஷிகாவிடம் அப்படி நடந்து கொள்ளும் போது தெரியக்கூடிய அதே முக ஜாடை, 6 அடி உயரம், அதிக அளவிலான முடி போன்றவற்றை தாண்டியும், பார்த்தாலே நிரூப் தான் என்று தெளிவாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நிரூப் அறிமுகமானதை தொடர்ந்து, இவரின் லிப் டு லிப் முத்தக்காட்சி வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அத்துடன் இவரும் நடிகை யாஷிகா ஆனந்தும் நெருங்கி இருப்பது போன்ற பல விதமான போஸ்களுடன் கூடிய புகைப்படங்கள் வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

கடந்த பிக்பாஸ் சீசன்4ல் யாஷிகாவின் நண்பர் பாலாஜி கலந்துகொண்டு விறுவிறுப்பை கூட்டியது போல் இந்த சீசனில் நிரூப் கலந்து கொண்டுள்ளார். மேலும் நிரூப், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனின் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தான் என்று அவரே நேற்று கமலிடம் தெரிவித்துள்ளார்.