யாரு கிங்? யாரு எங்? அஜித், விஜய் பற்றிய கேள்விக்கு ரம்யா பாண்டியன் பதில்.. படையெடுத்த தல தளபதி ரசிகர்கள்

ரம்யா பாண்டியன் நடிப்பில் சமீபத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் வெளியானது. கிராமப்புற கதையை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் எமோஷனல் காட்சிகளில் படத்தில் அதிகம் இடம்பெற்றதால் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

சமீபத்தில் ரம்யா பாண்டியன்னிடம் பேட்டியில், ‘ஒரு நீண்ட வசனம் இடம் பெற்றது. அதனை பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் சென்சார் போர்டு அந்த வாசகத்தை நீக்கி விட்டது. இதனால் நான் மிகவும் வருந்தினேன். அந்த வசனம் நேராக அரசியலை விமர்சிக்கும் என்பதால்தான் தூக்கிவிட்டதாக விளக்கம் அளித்தார்’.

அதன் பிறகு ரம்யா பாண்டியனிடம் விஜய், அஜித் பற்றி ஒரே வரியில் நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு ரம்யா பாண்டியன் விஜய் சார் சிறுவயதிலிருந்தே பார்த்துள்ளேன். தற்போதுவரை அவர் இளமையாக இருந்து வருகிறார் எனக் கூறினார்.

அடுத்ததாக அஜித் அவர்கள் ஒரு நாள் குடும்ப விழாவிற்கு வந்ததாகவும் அப்போது பொறுமையாக நின்று ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுத்து பேசிவிட்டு சென்றதாகவும் கூறினார். இந்த மாதிரி இருவரையுமே நேரில் பார்த்த அனுபவம் உள்ளது.

ஒரே வரியில் கூற வேண்டுமென்றால் விஜய் எங், அஜித் கிங் என கூறினார். இதிலும் ஒரு பிரச்சனை வரபோகுது யாரு கிங்கு யாரு எங்குனு ஒரு சண்டை வேற கிளம்ப போகுது.

கவர்ச்சியைத் தாண்டி நடிப்பில் முத்திரை பதித்த 3 நடிகைகள்.. அதான் இப்ப வரைக்கும் மார்க்கெட் நிக்குது

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஒரு சில நடிகைகள் ஹீரோயின்கள் கதாபாத்திரத்திற்கு மட்டுமே சரியாக இருப்பார்கள். அதேபோல் சில நடிகைகள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது சரியாக ...