யாருக்காக இந்த படம், அஜித்தின் வலிமை வெற்றியா தோல்வியா.? சினிமா பேட்டை விமர்சனம்

கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள படம் வலிமை. டிவி சானலில் ப்ரோக்ராம், யூ ட்யூபில் பேட்டி என அதிக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை இந்த படக்குழு. சில திங்களுக்கு முன்பு வரை படத்தின் பெயர் வலிமை தானா அல்லது “வலிமை அப்டேட்” என்பதா என்றே கூட ட்விட்டரில்  குழம்பியது உண்டு. வாங்க அப்படி இயக்குனர் வினோத் என்ன எடுத்துள்ளார் என பார்ப்போம்.

கதை– போலீஸ் டிபார்ட்மெண்டில் தனக்கென்று ஒருவித ஸ்டைலில் வேலை பார்ப்பவர் அஜித். மதுரையில் குடிகார அண்ணன், வேலை தேடும் தம்பி பாசக்கார அம்மாவுடன் வசித்து வருகிறார். சென்னையில் க்ரைம் அதிகம் நடக்கும் காரணத்தால் இங்கு ஸ்பெஷல் போஸ்டிங்கில் வருகிறார், தனது தோழி ஹுமா குரேஷியுடன் இணைகிறார். ஆரம்பமாகிறது இன்வெஸ்டிகேஷன்.

சர்வதேச மாபியாவின் போதை பொருளை கடத்துகின்றனர் சில பைக் இளைஞர்கள். உத்தரவு வந்ததும் செயின் பறிப்பு, கொலை செய்வது இவர்களது வேலை. “சாத்தானின் அடிமைகள்” என்பதே இந்த கூட்டத்தின் பெயர். ஒருவன் மேன்ஷனில் இறக்க அதனை வைத்து தலைவனை பிடிக்கிறார் ஹீரோ, வருகிறது இடைவேளை.

பின்னர் ஹீரோவின் தம்பி அந்த கேங்கில் என்ன செய்கிறான், அஜித்தின் குடும்பம் படும் பாடு, போலீசில் இவருக்கு சிலர் கொடுக்கும் அழுத்தம், வில்லன் கேங்க் போடும் அடுத்த பிளான், ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என செல்கிறது மீதி படம்.

சினிமாபேட்டை அலசல் – திரையரங்க கொண்டாட்டம் தான் இந்த வலிமை. ஆக்ஷன், சேசிங் காட்சிகள், ஸ்விக்யில் உணவு ஆர்டர் செய்வது போன்று குற்றங்களை நடத்துவது என மிக வேகமான திரைக்கதை மற்றும் ஸ்டைலிஷ் மேக்கிங் முதல் பாதியில்.

தீரன் படத்தின் பஸ் ஸ்டண்ட் ஸ்டைலிலே தொடங்குகிறது இரண்டாம் பாதி. அம்மா செண்டிமெண்ட், தம்பியின் போக்கு என ஸ்லோ ஆகிறது திரைக்கதை. சர்வேதச பிரச்சனை போல துவங்கும் இந்த படம் இரண்டாம் பாதியில் தனி மனிதன் போராடும் ரூட்டில் சென்று விடுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– படத்தின் முதல் பாதி இயக்குனருக்கு மிகவும் பிடித்து எடுத்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. எனினும் பேமிலி ஆடியன்ஸை கவரவேண்டும், ரசிகர்களுக்காக மாஸ் காட்சிகள் வைக்க வேண்டும், தயாரிப்பாளரை திருப்த்தி படுத்த வேண்டும் என இரண்டாம் பாதியில் சில சொதப்பல்கள் உள்ளது.

முதல் பாதி ஹாலிவுட் லெவலில் உள்ளது (இதோடு கூட படத்தை முடித்திருக்கலாம் இயக்குனர்.) இரண்டாம் பாதி செண்டிமெண்ட், மசாலா காட்சிகள் என 90 ஸ் படங்களை நினைவு படுத்துகிறது.

இரண்டாம் பாதியில் சில காட்சிகளை கட்செய்து, படத்தின் ஓடும் நேரத்தை குறைத்திருக்கலாம். அஜித் ரசிகர்களை மட்டுமன்றி, சினிமா ரசிகர்களையும் சற்றே ஏமாற வைத்துவிட்டது இந்த வலிமை. சூப்பர் படமாக வந்திருக்க வேண்டியது, ஆனால் ஒருமுறை பார்க்கும் படமாக மாறிவிட்டது எனபதனை வருத்தத்துடன் தான் நாம் சொல்ல வேண்டி உள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5