மோகன்லால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெத்தாக என்ட்ரி கொடுத்த தல.. ஆட்டம் கண்ட இணையதளம்!

இப்போ நம்ம கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது நம்ம தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் தான். எப்போதோ வெளியாக வேண்டிய படம் இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என பாட்டே பாடி விட்டார்கள்.

இந்த படத்தோட படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்தாண்டு தீபாவளி அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போ விஷயம் என்னனா வலிமை படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடந்தது நம்ம எல்லாருக்குமே தெரியும். இந்நிலையில் இந்த படத்தை பத்தின அப்டேட் வெளியாகும்னு பார்த்தா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட அஜித்தோட வீடியோ ஒன்னு சமீபத்தில வெளியாகி வைரலாகி வருதுங்க.

அதாவது தல அஜித் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் பங்கேற்றார். அந்த சமயத்தில் படப்பிடிப்பிற்கு நடுவே சர்ப்ரைஸ் விசிட்டாக மரக்கார் படத்தின் படக்குழுவினரை சந்தித்தார். அப்போது தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷனுடன் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

மேலும் அப்போதே அஜித் – மோகன்லால் இருக்கும் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் – மோகன்லாலுடன் இருக்கும் புதிய BTS வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. 67 வது தேசிய விருது விழாவில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பெரிய திரையில தான் பார்க்க முடியல அட்லீஸ்ட் இந்த மாதிரி வீடியோ மற்றும் அவரோட போட்டோக்கள பார்த்தாது மனச தேத்திக்கலாம்னு அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவ சோசியல் மீடியால டிரண்டாக்கிட்டு இருக்காங்க.

தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒர் நிலைமையா.? ஷங்கர் முதல் முருகதாஸ் வரை கைவிட்ட துரோகம்

இந்தியாவில் பல மாநிலங்கள் திரைப்படங்கள் எடுத்து அதன் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். அதில் முதலிடத்தில் ஹிந்தி சினிமா அதாவது பாலிவுட் உலக தரத்திற்கு இன்று பல படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நடிக்கும் நடிகர்கள் ...