மொயின் அலியை மெர்சல் பண்ணிய அஜித் ரசிகர்கள்.. அவரே கூறிய மறக்க முடியாத சம்பவம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் இவரது நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. பல வருடங்களாக அஜித் ரசிகர்கள் இப்படத்தினை திரையில் காண காத்திருக்கின்றனர். அதனால் இப்படத்தை வெளியிடுவதற்காக படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் வலிமை படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நாளுக்கு நாள் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். அதற்கு போனிகபூர் கூட பல வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்கள் அப்டேட் கேட்பது தவறில்லை எனக் கூறி ஒரு சில அப்டேட்களை வெளியிட்டார்.

ஆனால் அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு பார்க்கும் இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட்டை மட்டும்தான் கேட்டு வந்தனர். கிரிக்கெட் மைதானம், பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளம் என அனைத்து பக்கமும் சுற்றி சுற்றி வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவேன் என கூறியிருந்தார். தற்போது மொயின் அலி டெஸ்ட் போட்டியில் மறக்க முடியாத அனுபவத்தை பற்றி கூறியிருந்தார். அப்போது அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் அப்டேட் என்னால் மறக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடி வருகிறார். தற்போது அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் வருகிற பொங்கல் அன்று வலிமை படம் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.