மைனாவால் பிரியங்காவிற்கு வந்த சோதனை.. அப்ப சக்காளத்தி சண்ட ஆரம்பம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இதில் டைட்டில் வின்னர் ஆக சீரியல் நடிகரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆன ராஜு முதல் பரிசை தட்டிச் சென்றார்.

இதில் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்முன் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா சுய புத்தியுடன் செயல்படாமல், தன்னுடைய வெற்றி பாதையை நோக்கி நகராமல், நண்பர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்டு ரசிகர்களின் பார்வையில் திறமையான போட்டியாளராக தெரிய தவறிவிட்டார்.

இதனால் அவர் தனக்கிருந்த ரசிகர்களின் மனதை தவறாமல், தான் இப்படி தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார். மேலும் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது அவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் மைனா நந்தினி இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கினார்.

ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரியங்காவின் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்த்தனர். ஆனால் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டார்.

அப்போது பிரியங்கா கலந்துகொண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் மாகாபா ஆனந்த் மற்றும் மைனா நந்தினியும் தொகுத்து வழங்க வைத்த விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறதாம்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு வெற்றிப் பாதையையும் சிலருக்கு தோல்வியையும் தரும் என பிரபலங்கள் பலரின் கருத்து பிரியங்காவை வைத்துப் பார்க்கும்போது உண்மையாகி இருக்கிறது. இருப்பினும் பிரியங்கா இதையெல்லாம் அசால்டாக தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் தன்னுடைய முயற்சியினால் விஜய் டிவியில் வேறு ஒரு நிகழ்ச்சியில் என்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.