மைக் மோகன் போல் நானும் மார்க்கெட் இழந்து விடுவேன் எனக் கூறிய அஜித்.. போட்டு கொடுத்த இயக்குனர்

அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை அவரது ரசிகர்கள் வெகுகாலமாக வெளியீட்டிற்கு காத்திருக்கின்றனர். தற்போது இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்குமாருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ளது. ஏதோ ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது என பல பிரபலங்களும் பல பேட்டிகளில் கூறியுள்ளனர். ஆனால் ஒரு படத்தினை வெளிப்படையாக நடிக்க விருப்பமில்லை என கூறியது தற்போது தெரியவந்துள்ளது.

நீ வருவாய் என படத்தை இயக்கிய ராஜகுமாரன் இப்படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்ததாக தெரிவித்தார். மேலும் இப்படத்தில் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும் திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அப்போது விஜயோட கால்ஷீட் காரணமாக படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் விஜய் இப்படத்தில் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். முழுநேர கதாபாத்திரத்திற்கு வேற நடிகர் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

பின்பு அஜித்திடம் முழுநேர கதாபாத்திரத்திற்கு நீங்கள் நடியுங்கள் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் விஜய் சார் நடிக்கிறேன் என கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அஜீத் இப்படத்தில் தனக்கு நடிக்க விருப்பமில்லை என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

படத்தில் ஹீரோயின் ஹீரோவை வேண்டாம் என வெறுத்து ஒதுக்குவது போன்ற காட்சி இடம்பெற்றது. அந்த காட்சியில் நடிப்பதற்கு அஜித்குமாருக்கு சற்றும் விருப்பமில்லை ஒரு ஹீரோவை வேண்டாம் என கூறுவது சரியில்லை என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

மேலும் அஜித் வேண்டாம் என சொல்வதற்கு காரணம் இதேபோல் தான் மௌனராகம் படத்தில் ரேவதி மோகனை பார்த்து வேண்டாம் வேண்டாம் எனக் கூறுவார். அதன் பிறகு கார்த்தியை விரும்புவதுபோல் ரேவதி நடித்திருப்பார். இப்படத்தில் கார்த்திக்கு தான் அதிகமான வரவேற்பு கிடைத்தது.

இதேபோல் நானும் உங்கள் படத்தில் ஹீரோயின் ஹீரோவை வெறுப்பதுபோல் நடித்தால் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறாது. அதன்பிறகு மோகன் அவர்கள் போல் என்னாலும் படத்தில் நடிக்க முடியாமல் போய்விடும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.