மேலும் மேலும் கவர்ச்சிக்கு மாறும் விஜே அஞ்சனா.. திக்குமுக்காடிய இணையம்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் விஜே அஞ்சனா. மேலும் அஞ்சனா பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்வுகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீடு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அஞ்சனா நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணம், குழந்தை என சில காலம் ஓய்வில் இருந்த சஞ்சனா தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜே அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது இடையழகி சிம்ரன் போல் தனது இடை தெரியுமாறு உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் மாதிரியே இருக்கீங்க என கூறி ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அத்துடன் நாளுக்கு நாள் கவர்ச்சி தூக்கலான போட்டோசூட் களை நடத்தி மேலும் மேலும் கவர்ச்சிக்கு மாறிவரும் அஞ்சனாவை பார்க்கும் இளைஞர்கள் திக்குமுக்காடி கிடைக்கின்றனர்.