சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் தீபாவளி அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் சிம்பு மாநாடு படத்தை வெளியிட முடியாமல் தவித்தனர். மேலும் சிம்புவிற்கு தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளும் பிரச்சினைகளும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் இதைப் பற்றி எதையும் பேசாமல் இருந்தார் சிம்பு.

ஆனால் தற்போது மாநாடு படத்தின் பிரஸ்மீட்டில் தன்னை ரொம்ப அனைவரும் சோதிப்பதாகவும் நிறைய சோதனைகள் பார்த்து வந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி போயினர்.

அதற்கு காரணம் சிம்பு நடிப்பில் உருவான AAA திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது, இதற்கான தொகை கொடுத்து விட்ட பிறகு சிம்புவின் படங்கள் வெளியிட வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதற்கு சிம்புவின் தாயார் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இல்லாமல் ஆதரவாக பேசிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. தற்போது சிம்பு தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை மேடையிலேயே கூறி கண்கலங்கிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு மாநாடு பிரஸ்மீட்டில் கண்கலங்கினார்

இறுதியாக சிம்பு பேசும்போது என் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ரசிகர்கள் ஆதரவு கேட்டுள்ளார். தற்போது அதற்கு ரசிகர்கள் சிம்புவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஆதரவு கூறிவருகின்றனர்.