மேடையிலேயே கேவலமாக பேசிய மிஸ்கின்.. சிரித்து மகிழ்ந்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஸ்கின். இவர் விசித்திரமான கதைக்களத்துடன் எடுக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. தற்போது மிஷ்கின் பிசாசு2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

மிஸ்கின் எப்போதுமே எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இதனால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது பொது மேடையிலேயே சிலரை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். அதில் சில அருவருப்பான வார்த்தைகளும் பயன்படுத்துவார். இதற்கு பல பிரபலங்களும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

இந்நிலையில் வெற்றிமாறனிடம் பணியாற்ற மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு விழா நடைபெற்றது. அதில் வெற்றிமாறன் மற்றும் மிஸ்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பொதுமேடையில் மிஸ்கின் கேவலமாக பேசியதை வெற்றிமாறன் உட்பட பலரும் கேட்டு சிரித்து மகிழ்ந்தனர்.

அதாவது மேடையில் மிஸ்கின் வெற்றிமாறனின் நண்பர் ஜெகதீஷ் என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டார். அடுத்த படத்தில் அவருக்கு ஐந்து எருமை மாடுகளை ரேப் செய்யும் கேரக்டர் தருகிறேன் என ப்ரெஸ் மீட்டில் பத்திரிக்கையாளர்கள் முன்பு மிஷ்கின் அருவருப்பாக பேசியுள்ளார்.அதாவது வாய்ப்புக்காக ஏங்கும் ஒரு நடிகரை எவ்வளவு வேணாலும் கீழ்த்தரமாக பேசலாம் என்பது போல் பேசியுள்ளார் மிஸ்கின். அதுமட்டுமில்லாமல் மேடையிலேயே அவன் மயிரு மாதிரி நடந்து கொள்கிறான் போன்ற வார்த்தைகளே அனைவரும் முன்னிலையிலும் பேசினார். ஆனால் அங்கு மேடையிலிருந்த எந்த பிரபலங்களும் இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது தனிப்பட்ட சேனலில் ஒரு நடிகரை கிண்டல் செய்ததற்கு குரல் கொடுத்த ஆர்கே சுரேஷ் மற்றும் ஆரி தற்போது மிஷ்கினை தட்டிக் கேட்க தைரியம் இருக்கா. சுண்டைக்காய் செலிப்ரிட்டிகள், திராணி இருந்தால் இதை கண்டியுங்கள் இல்லையெனில் அடுத்தவர்களுக்கு நாகரீகம் பாடம் எடுக்காதீர்கள் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பொதுமேடையில் கேவலமாக பேசும் பிரபலங்களுக்கு முதலில் புத்திமதி சொல்லி கொடுங்கள். ஒரு பொது இடத்தில் இது மாதிரி செய்வது கேவலமான காரியம். இதனைக் கேட்க தைரியம் இல்லாத ஜால்ரா ஆர்கே சுரேஷ், ஜால்ரா ஆரி என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.