மெல்ல மெல்ல தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போடும் பிரகாஷ்ராஜ்.. பாதியில் நின்ற படப்பிடிப்பு.!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் வில்லன் நடிகருக்கு பெயர் போனவர். இவரது வில்லத்தனம் பலராலும் பரவலாக பாராட்டை பெற்றுள்ளது. இவர் அதிகமான படங்களில் வில்லனாகவே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜால் விருமன் படத்தின் படப்பிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்காமல் பாதியில் ஊர் திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொம்பன் படத்திற்கு பின்னர் இயக்குனர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் படம் தான் விருமன். இப்படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முதல் கட்டமாக தேனியில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகநீண்ட ஷெட்யூல்டாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுத்த கால்ஷீட்டிபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டார்களாம்.

இதேபோல் தான் இயக்குனர் ஹரி இயக்கி வரும் யானை படத்தில் அருண் விஜய்யின் அண்ணனாக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தாமதித்து வந்ததால் பிரகாஷ்ராஜை மாற்றி விட்டு அவருக்கு பதில் சமுத்திரகனியை நடிக்க வைத்துள்ளார்கள். இப்போது விருமன் படமும் பிரகாஷ்ராஜால் தடைபட்டுள்ளது. ஒரு முன்னணி நடிகரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20 வயதில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்தேன்.. ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. பத்திரிக்கையாளர் ஒருவர், அவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்ட கேள்விக்கு ஓபன் ஆக பதிலளித்துள்ளார். தற்போது சில காலமாக மீடியாவில் பெண்கள் ...