மெட்டி ஒலி, ரோஜா சீரியல் நடிகை காயத்ரி நடித்த படங்கள்.. அட! அஜித்தோட ஜோடி போட்டு இருக்காங்க

மெட்டி ஒலி,  ரோஜா சீரியல் புகழ் காயத்ரி நடித்த படங்கள். 2002 இல் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து மகிழ்ந்தார்கள். பல ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மெட்டி ஒலி தொடரை இன்றும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தொடரில் நடித்த எல்லா நடிகை, நடிகர்களும் மிகவும் பெரிய அளவில் பிரபலமானவர்கள். இத்தொடரில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியை நம்மால் மறக்க முடியாது. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது ரோஜா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசமலர்கள்: சுரேஷ்மேனன் தயாரித்து, இயக்கி 1994 இல் வெளிவந்த திரைப்படம் பாசமலர்கள். இப்படத்தில் அரவிந்த்சாமி, அஜித்குமார், ரேவதி, எம்என் நம்பியார், ரகுவரன் என பலர் நடித்திருந்தார்கள். பாசமலர்கள் படத்தில் ரேவதியின் தோழியாக காயத்ரி நடித்திருந்தார். இப்படம் காயத்ரியின் அறிமுகம் படமாக இருந்தது. இப்படத்திற்கு வி எஸ் நரசிம்மன் இசை அமைத்திருந்தார்.

ராஜாவின் பார்வையிலே: எஸ் சவுந்தரபாண்டியன் தயாரிப்பில் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் விஜய், அஜித், இந்திரஜா, காயத்ரி, வடிவேலு, வடிவுக்கரசி, ஜனகராஜ், சாருஹாசன் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் அஜித்துக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார்.