திருமுருகன் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்தும் திரைப்படங்களையும், நெடுந்தொடர்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மெட்டி ஒலி தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. திருமுருகன் இயக்கிய திரைப்படங்களில் பார்க்கலாம்.

எம் மகன்: தியாகராஜன் தயாரிப்பில் திருமுருகன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எம் மகன் இப்படத்தில் பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு என பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நாசர் கோப சுபாவம் உடைய அப்பாவாக எம்டன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் மகனாக பரத் கிருஷ்ண கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் பரத் தன் அப்பாவிடம் அவமானப்பட்டு அவர் கடையில் வேலை பார்த்து வருவார். தன் குடும்பத்தைப் பிரிந்து தனது மாமா பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையில் முன்னேறிய பிறகு தன் குடும்பத்துடன் இணைவார். இப்படம் கூட்டுக் குடும்பத்தை இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு: திருமுருகன் இயக்கத்தில் 2008ல் வெளியான திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு. இப்படத்தில் பரத், பூர்ணிமா, பொன்வண்ணன், வடிவேலு என பலரும் நடித்திருந்தனர். இப்படம் நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் வடிவேலின் கெட்டப்பும், சொரிமுத்து அய்யனார் என்ற கதாபாத்திரமும் மக்களை ரசிக்க வைத்தது. இப்படத்தில் பரத் முனியாண்டி ஆக நடித்து இருந்தார்.