தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்ப காலத்தில் கதாநாயகர்களுடன் டூயட் ஆடி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அதுவும் இவர் நடிப்பில் வெளியான அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இனிமேல் கதாநாயகர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என கூறினார். இதனை கேட்ட இயக்குனர்கள் உடனே நான்கு பக்க கதைகளை எழுதிக் கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ்டம் சென்று விட்டனர். வந்தவர்களை திருப்பி அனுப்ப மனம் இல்லாததால் படத்தில் நடிக்கவும் சம்மதித்து விட்டார். அதனால் தற்போது 5 படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால் அப்போது பெரிய அளவில் யாரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுகொள்ளவில்லை. மேலும் இவரது நடிப்பிற்கும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் இனிமேல் கதாநாயகர்களின் படங்களில் நடிக்க கூடாது என முடிவு எடுத்ததாக கூறினார்.

அதுமட்டுமில்லாமல் கதாநாயகர்களின் படங்களில் நடித்தால் படத்தின் கதை அனைத்துமே கதாநாயகனே மையமாகக்கொண்ட நகரும். இதனால் கதாநாயகி பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. இதுவே கதாநாயகி படத்தில் நடித்தால் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்ட கதை நகரும். இதன் மூலம் தங்களது நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்பதால் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நடித்து வருவதாக கூறி வருகின்றனர்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக திரில்லர் கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அதற்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான திரில்லர் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்மூலம் தற்போது சம்பளத்தை பல லட்சம் உயர்த்தியுள்ளார். அதனால் தான் திரில்லர் படங்களில் நடித்து தருவதாக கூறிவருகின்றனர்.