பல மைல்களை கடந்து தீவுகளில் போராடி விளையாடும் விளையாட்டுத்தான் ஜீ தமிழின் சர்வைவர். எப்பொழுதும் ட்விஸ்ட் நிறைந்த ஒரு ரியாலிட்டி ஷோவாகவே இந்த நிகழ்ச்சி உள்ளது. அந்த விதமாக நேற்றைய எபிசோடில் பல ட்விஸ்ட்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன. டிரைபல் பஞ்சாயத்தில் கலந்து கொண்ட காடர்களுக்கும் வேடர்களுக்கும் தங்கள் அணியிலிருந்து யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்பொழுது காடர்கள் அணியிலிருந்து அதிக ஓட்டுக்களைப் பெற்று லட்சுமி பிரியாவும், வேடர்களிடம் அதிக ஓட்டுக்களைப் பெற்று சரணும் தேர்வானர். ஆனால் இதற்கு முன்பே அவசரப்பட்டு முந்திரிக்கொட்டை தனமாக வேடர்களை நம்பாத இனிகோ, தான் தான் வெளியேறப் போவதாக நினைத்து அவரிடம் இருந்த இம்யூனிட்டி ஐடிலை பயன்படுத்தி விட்டார்.

அவசரத்தினால் புரிதல் இல்லாமல் விளையாடியதால் இனிகோவிற்கு ஏற்பட்ட ஒரு பெரிய நஷ்டம் இது. மேலும் ஒரு ட்விஸ்ட் ஆக எலிமினேஷன் இல் இருக்கும் சரணுக்கும், லட்சுமி பிரியா விற்கும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது. வெள்ளை நிறக் கல் மற்றும் கருமை நிறக் கல் என இரண்டு கற்கள் உள்ளது.

இதில் கருமை நிறக் கல் யாருக்கு வருகிறதோ அவர்கள் போட்டியை தொடரலாம். மற்றவர் மூன்றாம் உலகத்திற்கு அனுப்பப்படுவர் என்பது அந்த ட்விஸ்ட். இதில் ஏற்கனவே லக்கில் தப்பி விஜயலட்சுமி வெளியேற காரணமாக இருந்தார் சரண்.

மீண்டும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருக்க, அடிச்சது அவருக்கு மற்றுமொரு லக். கருமை நிறக் கல்லை பெற்று சேவ் ஆகி விட்டார் சரண். திறமையான போட்டியாளரான லட்சுமி பிரியா அதிர்ஷ்டம் இல்லாமல் வெளியேறிவிட்டார்.

மீண்டும் இவர் மூன்றாம் உலகத்திற்கு சென்று, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை திறமையாக விளையாடி தக்கவைத்துக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.