முற்றுப்புள்ளி வைக்க நினைத்த தனுஷ்.. வேகமெடுக்கும் கதிரேசன் தம்பதி

நடிகர் தனுஷை தங்களது மகன் தான் என வேலூரை சேர்ந்த கதிரேசன்,மீனா தம்பதியினர் பல வருடங்களாக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தற்போது தனுஷிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக இத்தம்பதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதனிடையே ஏற்கனவே தனுஷ் தங்களது மகன் தான் என வேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனா தம்பதியினர் வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், கஸ்தூரிராஜா மற்றும் நடிகர் தனுஷின் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் அந்த தம்பதியினர் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் கடுப்பான தனுஷ் அத்தம்பதியினரிடம் நான் செய்யாததை எல்லாம் செய்தோம் என்று சொன்ன காரணத்திற்காக 10 கோடி வரை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் அல்லது வழக்கை வாபஸ் பெற்று விடுங்கள் என்று தனுஷ் திட்டவட்டமாக வழக்கறிஞரை வைத்து பேசியுள்ளார்.

இருந்தாலும் அந்த தம்பதியினர் இந்த வழக்கை வாபஸ் பெறாமல், தைரியமாக நடிகர் தனுஷ் எங்களது மகன் தான் என்றும் அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் தனுஷின் விவாகரத்துக்குப் பின்னர் பல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் நடிகர் தனுஷுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வரும் காரணமாக, தனுஷின் திரை வாழ்க்கை சற்று மந்தமாகி உள்ளது. மேலும் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட சமீபகால திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த பிரச்சினை தற்போது தனுஷுக்கு பூதாகரமாய் எழுந்துள்ளது.

அப்பாவை மிஞ்சிய மகள்.. பலான விஷயத்தை அப்பட்டமாக பேசிய அக்ஷர ஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் பல திரைப்படங்களில் நடித்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர். இவரோட இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அதுலயும் முக்கியமா ஸ்ருதிஹாசன் ...
AllEscort