இசையின் சிகரம் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்தான் எஸ் பி பாலசுப்ரமணியம். இவருடன் சேர்ந்த இவரது சகோதரர், சகோதரிகள் ஏழு பேர். எஸ்பிபி தந்தை சாம்பமூர்த்தி ஒரு ஹரி கதா நடிகர், இவர் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஜினியராக வேண்டும் என்று அவரும்,அவர் தந்தையும் விரும்பினார். ஆந்திராவில், இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு டைப்பாய்டு வந்ததால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். மீண்டும் இவர் இன்ஸ்டியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ், சென்னையில் அசோசியேட் மெம்பராக சேர்ந்து படிக்கத் தொடங்கினார். படிக்கும்போதே நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார்.

கல்லூரியில் பாடிய எஸ்பிபிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழில் பாடிய முதல் படம் வெளியாகவில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் தெலுங்கு பாடல் ரெக்கார்டிங் இன் போது எம்ஜிஆர் அவரது குரலை கேட்டு எம்ஜிஆர் படத்தில் பாட வாய்ப்பு தந்தார்.

எஸ்பிபி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி. எஸ்பிபி சரண் சினிமாவில் பின்னணி பாடகராக உள்ளார். எஸ்பிபி 54 ஆண்டுகளில், 16 இந்திய மொழிகளில் சுமார் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அனிருத்தா என்ற லைட் மியூசிக் குழுவிற்கு எஸ்பிபி தலைமை தாங்கி நடத்தி வந்ததாகவும் அந்த குழுவில் இளையராஜா கிட்டார் மற்றும் ஹார்மோனியமும், கங்கையமரன் கிட்டாரும், பாஸ்கர் தாளமும் இசைத்து வந்ததாக கூறப்படுகிறது.

எஸ்பிபி 6 முறை ஃபிலிம்ஃபேர் விருதும் 8 முறை நந்தி விருதும் வென்றுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் பெற்றுள்ளார். முறையாக இசையை கற்றுக் கொள்ளாமலே இவ்வளவு சாதனை படைத்துள்ளார்.

எஸ்பிபி பாடல்கள், அவரது குரல், குழந்தை உள்ளம், சிரித்த முகம் என்றுமே நம்மால் மறக்க முடியாது. இம்மண்ணுலகம் உள்ளவரை அவர் பாடல்களும் என்றும் வாழும். என் தேகம் மறைந்தாலும், இசையாக மலர்வேன்.