முறுக்கு மீசையுடன் யாஷ் கெட்டப்புக்கு மாறிய பிரஜன்.. என்னா ஸ்டைலு, குவியும் லைக்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை எனும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரஜன். இந்த சீரியல் டைட்டில் சாங் மிகவும் பிரபலமாகும். அந்த சமயத்தில் இளைஞர்களின் செல்போன் ரிங் டோனில் இப்பாடல் இடம் பெற்றிருக்கும். இதனை தொடர்ந்து சின்னதம்பி எனும் சீரியலிலும் பிரஜன் நடித்து இருந்தார்.

அது மட்டுமின்றி தமிழில் மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் பிரஜன் நடித்துள்ளார். சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது அன்புடன் குஷி எனும் சீரியலில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் பிரஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பிரஜன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நினைவெல்லாம் நீயாடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும், ஒரு கல் ஒரு கண்ணாடி புகழ் மதுமிதாவும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரஜன் அடர்ந்த தாடி வைத்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேஜிஎஃப் படத்தில் யாஷ் கெட்டப் போலவே பிரஜன் இருப்பதாக கூறி வருகின்றனர்.

கூட்டுக் களவாணியாக மாறிய பிரியங்கா.. இணையத்தில் பொங்கி எழுந்த ரசிகர்கள்

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா நேற்று தாமரையிடம் மொக்கை வாங்கியதால் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி தானாகவே வந்து மாட்டிக் கொண்டார். இமான் அண்ணாச்சி ...
AllEscort