முரட்டு உடம்பில் கையை உயர்த்திய மாஸ்டர் மகேந்திரன்.. ஹ்ரித்திக் ரோஷனுடன் ஒப்பீட்டு வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் சிறுவயதிலிருந்தே பல படங்கள் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். முதல் படமான நாட்டாமை படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து பலரும் பெரிய அளவில் பாராட்டினர். படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் மகேந்திரன் சிறுவயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான 2 தமிழ்நாடு விருதுகளை வாங்கினார்.

அதன் பிறகு ரஜினிகாந்த், சரத்குமார் மற்றும் விஜய் போன்ற பல நடிகர்கள் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதிலும் மின்சார கண்ணா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருக்கும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

சமீபத்தில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

எப்படி மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பை பாராட்டினார்கள். அதேபோல் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பையும் பலரும் பாராட்டினர். இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன மாஸ்டர் மகேந்திரனுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மாஸ்டர் மகேந்திரன் உடற்பயிற்சி செய்து வருகிறார். மேலும் தான் உடற்பயிற்சி செய்வதற்கு கிருத்திக் ரோஷன் தான் காரணம் என பதிவிட்டுள்ளார். தற்போது மாஸ்டர் மகேந்திரன் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாகுறதுக்குள்ள இவர வெச்சு படம் எடுக்கணும்.. பலநாள் கனவுடன் காத்திருக்கும் சுந்தர் சி

காமெடி கலந்த படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கத்தைக் காட்டிலும் நடிப்பிலும் பட்டையை கிளப்புவார். பெரும்பாலும் நவரச நாயகன் கார்த்திக், சுந்தர் சி கூட்டணியில் வெளியான படங்கள் நல்ல ...