முன்றே படத்தில் விஜய்யை வளைத்துப் போட நினைத்த நடிகை.. எஸ்.ஏ.சந்திரசேகர் வச்ச ஆப்பு

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் சில கிசுகிசுக்கள் பலரின் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. அந்த கிசுகிசுவால் காணாமல் போன திரை பிரபலங்களும் உண்டு.

அப்படி ஆரம்ப காலத்தில் சில கிசுகிசுவில் சிக்கினாலும் இன்று ரசிகர்களின் தளபதியாக இருப்பவர் நடிகர் விஜய். சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக இருப்பவர் எஸ் ஏ சந்திரசேகர்.

இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் இவரின் மகன் விஜய்யை ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து விஜய் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. அப்போது அவருக்கும் நடிகை சங்கவிக்கும் காதல் என்று பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஏனென்றால் அந்த சமயத்தில் விஜய் சங்கவியுடன் இணைந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களில் எல்லாம் அவர்கள் இருவருக்கும் இடையே மிகவும் நெருக்கமான காதல் காட்சிகள் அதிகமாக இருந்தது.

இப்படி ஓவர் நெருக்கம் காட்டி நடிக்கும் அவர்களை பற்றி பல பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட விஜய்யின் அப்பா சந்திரசேகர் அவரை கூப்பிட்டு இனி சங்கவியுடன் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்காதே என்று அதிரடியாக கூறி இருக்கிறார்.

மேலும் அவருடன் நடித்தால் அது உன் சினிமா வாழ்வையே பாதிக்கும் அதனால் இனி நடக்காதே என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். அப்பாவின் பேச்சை தட்டாத விஜய்யும் அதன்பிறகு சங்கவியுடன் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் விஜய் சிறிது சிறிதாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்.