முன்றே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் ஆண்டனி.. அவர் பட தலைப்பை வைத்தே திட்டித்தீர்த்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து, தற்போது நடிகராக பிரபலமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. நான் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர் பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய இத்திரைப்படத்தை T.D. ராஜா மற்றும் பலர் இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படக்குழு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளிலேயே சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளனர். மேலும் இத்திரைப்படம் 3 நாளில் 5 கோடி வசூலித்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இந்த நிகழ்வினை தயாரிப்பாளர் கே ராஜன் வன்மையாக கண்டித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான “கே.ராஜன்” அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் சக்சஸ் மீட் பற்றிய கேள்வியை கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர் திரைப்படம் வெளியான மூன்று நாளிலேயே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது என்று கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. தான் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்ற பொழுது காலை காட்சியில் 25 பேரும், மாலை காட்சியில் 30 பேரும் மட்டுமே இருந்தனர் இந்நிலையில் மூன்று நாளில் எப்படி படம் சக்சஸ் ஆகும் என்று கேட்டுள்ளார்.

மேலும் சாதாரண நாட்களிலேயே மக்கள் திரையரங்கிற்கு வருவது குறைந்து உள்ளது தற்போது கொரோனா காலகட்டத்தில் 50 சதவீத இருக்கையில் ஒரு படம் மூன்று நாளில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை.

இவ்வாறு அவர்கள் சக்சஸ் பார்ட்டி வைத்திருந்தால் அது அவர்களின் திமிருப்புடிச்சவன் என்றும், தயாரிப்பாளர் அடுத்த திரைப்படத்திலும் ஹீரோவின் தேதி பெறுவதற்காகவே இந்த சக்சஸ் மீட் வைத்து உள்ளார்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

மாநாடு எஸ் ஜே சூர்யா கதாபாத்திரத்தை மிஸ் செய்த சூப்பர் நடிகர்.. அடப்பாவமே!

இன்று திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா கொண்டாட்டம் ஆக இருப்பது சிம்புவின் மாநாடு படம்தான். இவ்வளவு நாளா எங்கேயோ போயிட்ட நீ என சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து ...
AllEscort