முன்னணி நடிகர்களால் சினிமாவிற்கு வந்த சாபக்கேடு.. அடுத்த மீராமிதுனாக மாறும் வனிதா.!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் 80-100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பது தமிழ் சினிமாவிற்கு வந்த சாபக்கேடு என சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது பேட்டி ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில், பெரிய ஹீரோக்கள் அதிகமாக சம்பளம் கேட்பதால் சின்னச் சின்ன நடிகர்கள் திரை உலகில் பெரிதாக சம்பாதிக்க வாய்ப்பே கிடைப்பதில்லை. அத்துடன் பெரிய ஹீரோக்கள் மட்டுமே அதிகமாக சம்பாதிக்க முடிகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பேசியிருக்கும் வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆர் கோபால் இயக்கத்தில் வெளியான ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற திருக்குறளின் தலைப்பையே படமாக வைத்திருக்கும் திரைப்படத்தின் பிரஸ்மீட் போது தான் நடிகை வனிதா இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார்.

முன்பு விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருந்த வனிதா, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின்போது ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு எந்த ஒரு விஜய்டிவி நிகழ்ச்சியிலும் வனிதாவை பார்க்க முடிவதில்லை.

தற்போது விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வனிதா, கலர்ஸ் தமிழில் பல நிகழ்ச்சிகளில் கமிட்டாகியுள்ளார். அத்துடன் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் வனிதாவின் பேச்சு இணையத்தின் அனுதினமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வேண்டாத சர்ச்சை பேச்சுகளை பேசி மீராமிதுன் தற்போது வசமாக சிக்கிக் கொண்டார். இதேபோல் நம்மை மீடியா மற்றும் ரசிகர்கள் பேச வேண்டும் என்பதற்காக மேடையில் முன்னணி நடிகர்களை திட்டியதால் ரசிகர்கள் தங்களது தரமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.