முத்தக்காட்சியில் சிம்புவை ஓரம்கட்டிய பிரபல நடிகர்.. வாய வச்சுகிட்டு சும்மா இருந்தாதானே

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மன்மதலீலை. ஆக்சன் படங்களில் பட்டையை கிளப்பும் வெங்கட் பிரபு முழுவதும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் சிம்புவை வைத்து மாநாடு என்ற டைம் லூக் படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தில் பெரிய அளவு ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தற்போது இளம் நடிகரான அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை படத்தில் முழுவதும் முத்த காட்சிகள் எடுத்துள்ளார். வெங்கட் பிரபு ஒரு அடல்ட் மூவி எடுத்து இருக்கிறார் என்பதே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் வெங்கட்பிரபுவை கேவலமாக விமர்சித்து வந்தனர்.

மேலும், படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகளில் இடம்பெற்றிருந்தது. அசோக் செல்வன் பில்லா-2, சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். அசோக் செல்வன் ஒன்பது வருட காலங்களில் வெறும் 13 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

ஏனென்றால் அவ்வளவு நிதானமாக பட தேர்வு செய்து நடிக்கக் கூடியவர். ஆனால் தற்போது அசோக் செல்வன் தனக்கு இருந்த பெயரை மன்மதலீலை படத்தின் மூலம் கெடுத்துக் கொண்டார். இந்நிலையில் மன்மதலீலை படத்தில் அசோக் செல்வனுக்கு மூன்று ஹீரோயின்கள். அதிலும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் இருவரும் படு கவர்ச்சியாக காண்பிக்கபட்டார்கள். மேலும் முத்தக்காட்சிகள் என்றாலே சிம்பு தான்.

அவர்களையே மிஞ்சும் அளவிற்கு பெயர் வாங்கி விட்டார் அசோக் செல்வன். ஆனால் நடிப்பில் கொஞ்சம் சொதப்பி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். அதுவும் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வனை இப்படி கோர்த்து விட்டு உள்ளாரே வெங்கட் பிரபு என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.