முதுகில் குத்திய நெல்சன்.. உச்சகட்ட கொலைவெறியில் தளபதி, ரஜினிகாந்த் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்கள் அனைவரும் நெல்சன் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு அவர் தற்போது முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ஏற்கனவே கவர்ந்த நிலையில் தற்போது படத்தை காண்பதற்கு அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நெல்சன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நாளை என்று ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் இது ரஜினியின் 169 வது படத்திற்கான அப்டேட் என்றும், விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் என்றும் நினைத்துக் கொண்டனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகப் போகிறது என்று மிகுந்த குஷியில் இருந்தனர்.

அந்த அறிவிப்பை எதிர்பார்த்து உச்சக்கட்ட ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனென்றால் நெல்சன் நாளை என்று குறிப்பிட்டு இருந்த அந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பீஸ்ட் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது என்ற அறிவிப்பை போட்டிருந்தார்.

இப்படி ஒரு அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் நம்ப வைத்து முதுகில் குத்திய நெல்சன் மீது கொலை வெறியில் இருக்கின்றனர். இப்படி டென்ஷன் செய்து ஏமாற்றி விட்டாரே இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று விஜய் ரசிகர்கள் நொந்து போய் விட்டனர்.

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை எப்பொழுதுமே பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகப் போகிறது என்றால் இது போன்ற பல ட்விஸ்ட் வைத்துதான் அறிவிப்பு வெளியாகும் என்று. எது எப்படியோ நாளை வெளியாக போகும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் இப்போதிருந்தே ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.