முதல் முறையாக 5 மொழிகளில் உருவாகும் விஷாலின் 32வது படம்.. டைட்டிலை கேட்டாலே சும்மா அதிருதில்ல.!

தமிழில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. எனவே அப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷாலின் 32வது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு லத்தி என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. முதல் முறையாக விஷால் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்க, நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ், இசையமைக்கிறார். எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என அடுத்தடுத்து விஷால் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.