முதல் படத்திலேயே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர்.. அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுது

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான டைரக்டர் ஷங்கர். இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே மெகா பட்ஜெட் படங்கள் தான் இந்தியன், முதல்வன், சிவாஜி,  எந்திரன் போன்ற பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் சங்கர். இவர் இளையதளபதி விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்களுக்கு  இரு மகள்கள் உள்ளனர்  மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். அவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது மகளின் திருமணத்திலும் வழக்கம்போல் பிரமாண்டத்தை காட்டி இருந்தார் இயக்குனர் சங்கர்.

தமிழக முதல்வர்  நேரில் சென்று வாழ்த்துக்களை கூறினார். இளைய மகள் அதிதி சங்கர் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் கார்த்திக் நடிப்பில் டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். படத்திற்கான டைட்டில் விருமன்.

அதிதி சங்கர் சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். டைரக்டர் சங்கர் இன் மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆவது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் சென்று சேர்ந்திட வேண்டும் என்பதால் படத்தில் தனக்கு மட்டும் சோலோவாக குத்து பாடல் ஒன்று வேண்டும் என இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். பிரமாண்ட இயக்குனரின் மகள் அவரின் பெயரை காப்பாற்றுவாரா என்று விருமன் படம் வெளியான பிறகுதான் தெரியும்.

எல்லை மீறிய ஸ்ருதிஹாசன்.. கடும் கோபத்தில் கமலுக்கு போன் போட்டா ரஜினி

தற்போது ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக மாறி இருப்பவர் நடிகர் தனுஷ். தன்னுடைய மனைவியை பிரிவதாக அவர் அறிவித்த பிறகு எங்கு திரும்பினாலும் இவரை பற்றிய செய்திகள் தான் மீடியாவில் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ...
AllEscort