சிங்கம்புலி இயக்கத்தில் தேவா இசையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் ரெட். இந்தப்படத்தில் தல அஜித் தனது நடிப்பால் பிடல் எடுத்திருப்பார். தல அஜித்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிகை பிரியா கில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிறகு நடிகை பிரியா அவர்களுக்கு வேறு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை. தமிழில் இந்த ஒரே படத்தில் மட்டும் சினிமாவில் தோன்றி அதன் பின் தமிழ் திரைத்துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டார் பிரியா கில்.

இவர் 1996 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் வந்தவர். இவரது முதல் திரைப்படம் ‘தேரி மேரா ஸப்னா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, போஜ்புரி,  தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இதேபோன்று ஒரு சில நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதன் பின் சினிமாவில் தடம் தெரியாமல் மறைந்து விடுகின்றனர். அவர்களுள் பிரியா கில்லும் ஒருவர்.

ஒரு படம் நடித்தாலும் அல்டிமேட் ஸ்டார் அஜீதுடன் நடித்து நடித்ததன் மூலம் இவருக்கு என்ற ரசிகர் கூட்டமும் உள்ளது. இறுதியாக நடிகை பிரியா 2006ஆம் ஆண்டு வெளிவந்த பைரவி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

கடந்த 2015இல் அவர் திருமணம் செய்துகொண்டு டென்மார்க்கில் செட்டிலானார். சொந்தமாக ஒரு மாடல் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறாராம்.