முதல் நாளில் வசூல் சாதனை படைத்த வலிமை.. கல்லா கட்டிய போனிகபூர்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அஜித் படத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு வலிமை படத்தின் மூலம் திருப்திப்படுத்த உள்ளார் அஜித். அதுமட்டுமல்லாமல் வலிமை படத்திற்கு சில நெகட்டிவ் கமெண்டுகளும் வந்திருந்தது.

வலிமை படத்தை 3 மணி நேரம் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு பொறுமை வேண்டும் எனவும், படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி சுவாரசியம் குறைவாக இருந்ததாகவும் விமர்சனங்கள் வந்தது.

ஆனாலும் வலிமை படம் விடுமுறை நாட்களில் இல்லாமல், வழக்கமான நாட்களில் வெளியானாலும் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் சுமார் 36 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளியுள்ளது.  கொரோனா தொற்று காரணமாக தற்போது சென்னை நகரம் இப்போது வெவ்வேறு மண்டலத்தில் உள்ளது.

சில திரையரங்குகளில் ப்ரீமியர் காட்சிகள் இல்லை. அதுமட்டுமல்லாமல் பல திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் வலிமை படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப்போனது. இவ்வாறு பல இடையூறுகள் இருந்தும் வலிமை படம் சென்னையில் மட்டும் 1.82 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீதேவி மூலம்தான் போனி கபூருக்கு அஜித் அறிமுகமானார். இதன் மூலம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை போனி கபூர் தயாரித்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவு நாளிலேயே வலிமை படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.