முதல் நாளில் வசூலை வாரிக் குவித்த டாப் 3 படங்கள்.. தனுஷ் படத்தை முந்த முடியாத டாக்டர்

கொரோனா காலகட்டத்தில் நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி கருதி நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. சூழ்நிலை ஓரளவிற்கு சரியான பின்னரே திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதுவும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலிலும் தியேட்டரில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 3 படங்களை தான் இங்கு பார்க்க போகிறோம்.

இதில் முதல் இடத்தில் இருப்பது தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் படம் தான். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 25.40 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை கூறும் படமாக வெளியான கர்ணன் படம் முதல் மட்டும் 10.46 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இதனையடுத்து மூன்றாவது இடத்தில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இடம் பிடித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி முதல் நாள் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று படங்களும் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் நடிகர்கள் மட்டுமே. விஜய் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் என்பதாலே இந்த படங்களுக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.