முதல் குறும்படத்தில் கொடூரமாக நடித்துள்ள ராஜு பாய் வீடியோ.. பிக்பாஸில் வேற லெவல் ப்ரோ

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரில் தொடங்கி ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி என பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜு. தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ராஜு. இத்தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ராஜு பிக் பாஸ் சீசன் 5 வில் போட்டியாளராக உள்ளார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு என்றே நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் ராஜு பிக் பாஸ் சீசன் 5 இல் இறுதிவரை செல்வார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜு பிக் பாஸ் போட்டியாளர் என்பதால் இவருடைய புகைப்படங்கள், ஷார்ட் பிலிம்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவரது திருமண புகைபடங்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டது.

ராஜு முதலாவதாக எடுத்த ஷார்ட் பிலிம் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ராஜூ சினிமா மீது உள்ள ஆசையால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துவிட்டார். அதன் பின்பு நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சிறிது காலம் பணியாற்றினார்.

அப்போதே ஷார்ட் பிலிம் எடுக்க தொடங்கியுள்ளார். ராஜு முதலில் எங்கோ மனம் போகுதே என்ற ஷார்ட் பிலிம்யை எடுத்து அதில் அவரே நடித்துள்ளார். ஷார்ட் பிலிம்ல் ராஜு, நான் ஒரு பிலிம் மேக்கர் என் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என ஒரு பெண்ணுடன் கேட்கிறார்.

இதில் அவருடைய முக பாவனை எல்லோரும் சிரிக்கும் படி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இப்படி இருந்த ராஜு இப்ப எப்படி ஆளு மாறிவிட்டார் என்று ஆச்சரியப்படுகிறார்கள். ராஜு நடித்த முதல் படம்