முதலில் வலிமை வில்லன் இந்த மலையாள நடிகரா? கொல மாஸா இருந்திருக்குமே!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி கடைசியாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் வலிமை. முன்னதாக வலிமை படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்ததாக தீபாவளிக்கு டிரைலர் வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். முன்னதாக இவர் அஜித்துக்கு ஜோடியாக தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு சமயத்தில் கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால் பின்னர் அஜித்தின் நெருங்கிய தோழி வேடத்தில் நடிக்குமாறு கதை எழுதி மாற்றி விட்டாராம் வினோத்.

அதைப்போல் தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். அவருடைய போஸ்டர்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. மேலும் அஜித்துடன் நடிப்பதை சமூக வலைதள பக்கங்களில் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கிறார் கார்த்திகேயா.

இப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்பை பிரபல மலையாள நடிகர் மிஸ் செய்து விட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆகவேண்டும். முதல் முதலில் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் டோவினோ தோமஸ் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என பிரபல பத்திரிக்கைக்கு வினோத் நேரடியாகவே பேட்டி கொடுத்துள்ளார்.

டோவினோ தோமஸ் வலிமை படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் அவர் முன்னதாக நடிக்க நடிக்க ஒப்புக்கொண்ட பல படங்களின் தேதிகள் ஒத்து வராததால் படத்தின் வாய்ப்பை இழந்து விட்டாராம். கண்டிப்பாக டோவினோ தாமஸ் வில்லனாக நடித்திருந்தால் இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முன்னதாக டொவினோ தாமஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.