முதலமைச்சர் பதவிக்கு அடி போடும் சத்யராஜ்.. பிரபல கட்சியில் இணையப்போகும் வாரிசு

நடிகர்கள் சிலர் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைய முயல்வார்கள் . ஆனால் சிலரோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களை காப்பாற்றிக்கொள்ள நினைப்பார்கள். அப்படி அரசியல் செல்வாக்கிற்கு தீவிர அரசியலுக்கு நுழைய வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பெரிய கட்சியில் இணைந்து இருந்தால் போதும் என பல நடிகர்கள் கட்சியின் துணையை நாடி இருக்கின்றனர். அப்போது தான் எப்போது என்ன பிரச்சனை என்றாலும் ஒரு சப்போர்ட் நமக்கு இருக்கும் என நடிகர்கள் எண்ணுகின்றனர். இப்படி இருக்கையில், சமீபத்தில் நடிகர் சத்யராஜ் அவர்கள் பொதுமேடைகளில் திமுகவிற்கு மிக அதிகமாகவே குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த அரசு விழாவில் கூட முதலமைச்சர் முக.ஸ்டாலின், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என அனைவரையும் புகழ்ந்து தள்ளி பேசியிருந்தார். இவர் இப்படி எல்லாம் பேச மாட்டாரே இவர் பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்று அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது.

சரி தேடி பார்க்கலாம் என்று வரலாற்று பக்கங்களை புரட்டி பார்க்கும் போது, அதற்கான பதில் தற்போது கிடைத்திருக்கிறது. சத்யராஜின் மகள் திவ்யா அரசியல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். அவர் தற்போது திமுகவிடம் ஐக்கியமாகி இருக்கின்றார் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.

திமுக கட்சியின் ஐடிவிங்கில் அதி தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் அரசியலுக்கு இப்போது திடீரென வரவில்லை. இதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி நான் பணக்கார பெண் என்பதால் களத்தில் இறங்கி வேலை செய்யமாட்டேன் என்று நினைக்க வேண்டாம் என்னை அப்படி வளர்க்கவுமில்லை. அரசியலில் இணைந்து சாதனைகள் பல புரிய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

சத்தியராஜ் தனது மகளின் ஆசையை நிறைவேற்ற கோரி அவரை திமுகவில் தீவிரமாக பணியாற்ற அனுமதித்திருக்கிறார். அதுமட்டுமின்றி மிகவும் தைரியமாக நான் என் பெண்ணை வளர்த்து இருக்கிறேன். அவள் கண்டிப்பாக அரசியலில் சாதனை படைப்பார் என்று அவர் கூறியிருக்கிறார். அனேகமாக அடுத்த தேர்தலுக்கு பொள்ளாச்சி கோயம்புத்தூர் தொகுதியில் சத்யராஜின் மகள் திவ்யா நின்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. சத்யராஜ் தந்தையாக உறுதுணையாக இருந்து தனது மகளின் கனவை நிறைவேற்ற தயாராகிவிட்டார். மேலும் ஒரு சிலர் சத்யராஜ் முதலமைச்சர் பதவிக்கு தற்போதே அடி போடுவதாகவும் கூறிவருகின்றனர்