முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. இனி டிஆர்பிக்கு திண்டாடும் விஜய் டிவி

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தவர் தான் நடிகர் வெங்கட். அதன்பிறகு இவர் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். கனா காணும் காலங்கள், தெய்வம் தந்த வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே இவரை அடையாளப்படுத்தியது.

இவருடன் சுஜிதா, ஸ்டாலின், குமரன், ஹேமா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் மீனா, ஜீவா இருவருக்கிடையேயான காட்சிகளில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் அஸ்வின் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் டிஆர்பி-ல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல மற்றும் கெட்ட செய்தி, உங்கள் அஸ்வின் நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறார் உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள், என்று பதிவிட்டுள்ளார்

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவாக அவரை நாம் காணலாம்