முக்காடு போட்டு போஸ் கொடுத்த சாய் பல்லவி.. அக்காவை மிஞ்சும் தங்கச்சி

தமிழ் நடிகையான சாய் பல்லவியை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதால் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் மலையாளத்தில் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.

மலையாள சினிமாவில் சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் மலர் டீச்சர் கேரக்டரை நம்மால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து பிசியான நடிகையாக மாறினார்.

தமிழிலும் மாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் ஜோடி சேர்ந்தார். படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் தமிழில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்ற சாய் பல்லவி பிசியான நடிகையாக மாறிவிட்டார். நாக சைத்தன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’  படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழில் புதிய படம் ஒன்றில் சாய்பல்லவி நடிக்க உள்ளார். தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.