மீனா, குஷ்புவுடன் குத்தாட்டம் போடும் ரஜினி.. வைரலாகும் அண்ணாத்த புதிய போஸ்டர்

மாஸ்டர் மற்றும் டாக்டர் போன்ற படங்கள் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக திரையரங்கு வட்டாரம் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் வருகின்ற தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் வெளியாகும் அண்ணாத்த படம்தான்.

ரஜினியின் முந்தைய படங்கள் சரியாக போகாதது அரசியல் சர்ச்சைகள் போன்ற பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு அண்ணாத்த படம் வெளிவர உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சாதாரணமாகவே உச்சத்தில் தான் இருக்கின்றன. போதாதற்கு சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களை மேலும் வெறியேற்றி வைத்துள்ளது.

விசுவாசம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த சிறுத்தை சிவா அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார் இதுவரை படத்தை பார்த்த நட்சத்திரங்கள் பலரும் படையப்பா மற்றும் பாட்ஷா படங்கள் போன்று இருப்பதாக கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இன்னும் படம் ரிலீஸ் ஆக சில நாட்களே இருப்பதால் தினமும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏதாவது ஒரு அண்ணாத்த அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாலை ஆறு மணிக்கு மருதாணி என்ற பாடல் வெளியாக உள்ளது.

இதுவரை டீசர் மற்றும் வெளியான பாடல்களில் நடிகை குஷ்பு மற்றும் மீனா போன்றோர் பற்றிய எந்த ஒரு காட்சியுமே இல்லாததால் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் மீனா மற்றும் குஷ்புவுடன் ரஜினி சேர்ந்து குத்தாட்டம் போடுவது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.