மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயின் 65 வது படமான பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது எடுக்கப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்குகிறார்.

பீஸ்ட் படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் படம் ஒரு ஷாப்பிங் மாலில் நடக்கும் பயங்கரவாத நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு பீஸ்ட் படக்குழு சென்னை திரும்பியது.

சென்னையில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைத்து அதில் பிரதான காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பீஸ்ட் குழு ஜார்ஜியா செல்ல இருக்கிறது. ஜார்ஜியாவில் இன்னும் சில காட்சிகள் எடுக்க உள்ளதால் படக்குழு இந்த மாதம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் சுற்றியே கதை அமைவதால் ஜார்ஜியாவில் பாடல் காட்சிகள் எடுக்கப்படலாம். ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சென்னையில் எஞ்சிய காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்தவுடன் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில காட்சிகள் திரும்ப எடுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தளபதி அந்த இடத்திற்கு செல்ல உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழு இருக்கு செலவு அதிகம்  என்பது ஒருபுறம் இருந்தாலும் வசூலில் சரிசெய்துவிடலாம்.