மீண்டும் தூக்குதுறை கெட்டப்பில் தெறிக்க விட போகும் அஜீத்.. இனி ஒரே அடாவடி தான்!

அஜித்தின் H. வினோத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு டிரெய்லரே இந்த லெவலில் இருக்கும் போது படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்தப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாகவும், படத்தின் கிளைமாக்ஸ் பாஸ்ட் அன்ட் ஃபூரியஸ் படம் போல இருப்பதாகவும் கூறி ரசிகர்களை மேலும் வெறிப்பிடிக்க வைத்து இருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படமும் H. வினோத்தான் என்றும், அஜித்தை மீண்டும் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் அஜித்தின் 61 வது படமாக தயாராக உள்ளது. அஜித்தை வலிமை படத்தில் ஸ்டைலான ரேசர் ஆக பார்த்தது போல் இல்லாமல் ஒரு கிராமத்து கதைக்களத்தில் அமைக்க இருப்பதால் அதற்கேற்ற கெட்டப்பில் அஜித் தூக்குதுரை போன்ற கெத்தான கிராமத்து கெட்டப்பில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை இயக்கும் H. வினோத் வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமம் என்பதால் மண்வாசம் வீச ஒரு பக்கா கிராமத்து கதை உருவாக இருப்பது தெளிவாகிறது. இந்தப் படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க இருக்கிறார்.

H. வினோத் இதற்கு முன்னர் இயக்கிய படங்கள் அனைத்தும் தான் தற்போது இவர் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்து இருக்கிறது.அதேபோல இதற்கு முன்னர் அஜித் நடித்த கிராமத்து கதைக்களமான வீரம், விசுவாசம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அஜித்தின் மாஸ் மேலும் அதிகரிக்க இந்த படங்கள் முக்கிய காரணமாக அமைந்தது. சிறுத்தை சிவா இந்த இரண்டு படங்களையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல தற்போது H. வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் இந்தப்படமும் மாஸான வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பதால் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை பொறுத்து இருந்து பார்க்கலாம்.