மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹிட் இயக்குனர்.. வரலாற்றை திருப்பி போட போகும் கதை

சூர்யா சமூக சார்ந்த பிரச்சனைகளை பல மேடைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது சூர்யா குடும்பமும் பள்ளிக்குழந்தைகள், விவசாயிகள் என பலருக்கும் தங்களது அறக்கட்டளை மூலமாக உதவி செய்து வருகிறார்கள். இதனால் தற்போது சூர்யா புது விதமான சமுதாய பிரச்சனை கொண்ட படத்தில் நடிக்க விரும்புகிறார்.

படங்கள் மூலமாக மக்களிடம் நல்ல விதமான சிந்தனைகளை சேர்க்க வேண்டும் என அடுத்த கூட்டணி சேர உள்ளனர். சூர்யா, சுதா கொங்கரா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சூரரை போற்று, இப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. சூரரை போற்று படம் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் சூர்யா, சுதா கொங்குரா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் இணையும் புதிய படம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக சூர்யா வாழ்க்கை வரலாறு படங்களில்தான் அதிகம் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் வாழ்க்கை வரலாறு படங்கள் தான்.

இதனால் சுதா கொங்கராவிடம் நீங்கள் இயக்கும் புதிய படத்தில் யாருடைய வாழ்க்கை வரலாறும் இல்லாமல் சமூக பிரச்சனைகளை கொண்ட புதுவிதமான கதையுடன் இருக்க வேண்டும் என சூர்யா கோரிக்கை வைத்துள்ளார். தற்போது சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவும் சமூக அக்கறை கொண்ட படங்களிலேயே நடித்து வருகிறார்.

சமீபத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சூர்யா தனது ஆஸ்தான இயக்குனர் பாலா படத்தில் நடிக்கவுள்ளார். தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிக்கயுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.