மீண்டும் களத்தில் குதித்த கார்த்திக்.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகனாக கலக்கியவர் தான் கார்த்திக் அப்போதெல்லாம் ரஜினி, கமலுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் வசூலில் சாதனை படைக்காமல் போக அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து விலக ஆரம்பித்தார்.

பல வருடமாக சினிமாவில் நடிக்காமல் காத்திருந்த கார்த்திக் கடந்த சில வருட காலமாக தான் மீண்டும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இருப்பினும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள படங்களில் மட்டுமே சம்மதித்து நடித்து வருகிறார்.

தற்போது கார்த்திக் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பு பெரிதாக பேசப்படும் எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பழைய படத்தில் பார்த்த கார்த்திக் போலவே இப்படத்திலும் தனது நடிப்பினை நிரூபித்துள்ளார் என கூறிவருகின்றனர்.

இப்படத்திற்கு பிறகு கார்த்திக் தீ இவன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திலும் கார்த்திக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும். இப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பினை மையமாக வைத்துதான் கதை நகர்வதாகவும் அதனால் கார்த்திக்கின் கதாபாத்திரம்தான் இப்படத்தில் பெரிதும் பேசப்படும் என கூறியுள்ளனர்.

கார்த்திக் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்காமல் இருந்தாலும், படத்தில் கதாநாயகனை விட கார்த்திக்கு தான் பெரிது பேசப்படுவார் என கூறி வருகின்றனர். தற்போது படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சுட்டுப்போட்டாலும் நடிக்க வராது.. தயாரிப்பாளரின் மகனை விளாசிய இயக்குனர்

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 8 தோட்டாக்கள், ஜிபி படத்தில் நடித்தவர் நடிகர் வெற்றி. இவர் பிரபல தயாரிப்பாளரின் பழனிச்சாமியின் மகன். தற்போது வெற்றி வனம் என்ற படத்தில் நடித்துள்ளார். வனம் படத்தை இயக்கியவர் ஸ்ரீகண்டன் ...