மீண்டும் களத்தில் குதிக்கும் 90’s கிட்ஸ் ஃபேவரிட்டான 5 நடிகைகள்.. விட்ட இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கா!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் இன் ஃபேவரட் நாயகியாக இருந்த நடிகைகள் சில படங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டனர். அதன்பிறகு ஒரு சில காரணங்களினால் படங்களில் நடிக்காமல் இருந்தனர். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்கள்.

மதுபாலா: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மதுபாலா. 90களில் முன்னணி நடிகையாக இருந்த மதுபாலா சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு வெளியான தலைவி படத்தில் ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்திருந்தார். தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார் மதுபாலா.

தபு: தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தபு. அதன் பிறகு அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைக்க அங்கு பல படங்களில் நடித்து பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து அஜித் 61 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமிகா: தமிழ் சினிமாவில் பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூமிகா.
களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக பூமிகா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் பூமிகா நடித்துள்ளார்.

லைலா: தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதன்பிறகு தீனா, தில், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த லைலா தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும், தமிழ் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

மாளவிகா: உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை மாளவிகா. இதைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து வந்த மாளவிகா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது ஜீவா, சிவா இருவரும் இணைந்து நடிக்கும் கோல்மால் படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மங்கம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.