மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்.. படத்தின் தலைப்பே வேற மாதிரி

தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக இருந்து வருகிறார் ரம்யா பாண்டியன். நடிகர் அருண்பாண்டியன் இவருக்கு சித்தப்பா முறை ஆவார். தற்போது தமிழ் படங்களில் தனது திரைப்பட பயணத்தை தொடர்ந்து இருக்கிறார்.

2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பை பார்த்த சமுத்திரகனி ரம்யாவை ஆண்தேவதை திரைப்படத்தில் நடிக்க கேட்டார்.

ஆண் தேவதை திரைப்படத்தில் ஐடி பணிபுரியும் பெண்ணாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

அதையடுத்து கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரம்யா மிகவும் பிரபலம் அடைந்தார்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அறிமுக இயக்குனர் அருள் அஜித்தின் இயக்கத்தில் இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

விறுவிறுப்பான திரில்லர் நிறைந்த துப்பறியும் திரைப்படமாக இடும்பன்காரி திரைப்படம் உருவாகி வருகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இத்திரைப்படத்தில் விஜய் டிவி நீயா நானா கோபிநாத், இயக்குனர் வேலுபிரபாகரன், ஜோதி மற்றும் அருள் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கமலையே டீலில் விடும் மெகா ஸ்டார்.. ஓஹோ! கதை அப்படிப் போகுதா?

கமல் விக்ரம் படத்தை தொடர்ந்து மலையாள நடிகர் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்நிலையில் இப்படத்தில் பல திரை நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படம் பிரமாண்ட ...
AllEscort