லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் அளித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

நயன்தாராவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் சத்யராஜ் மற்றும் அனுபம்கெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு மிகவும் வித்தியாசமாக கனெக்ட் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை பார்க்கும்போது நிச்சயம் இப்படம் ஹாரர் படமாக இருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் இப்போதே யூகிக்க தொடங்கி விட்டார்கள்.

ஏனென்றால் ஏற்கனவே அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடித்த மாயா படம் முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருந்தது. எனவே இப்படமும் அவ்வாறு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா தற்போது கைவசம் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் கோல்டு, காட்ஃபாதர், ஹிந்தியில் லயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த லிஸ்டில் கனெக்ட் படமும் இணைந்துள்ளது. வயதானாலும் இவரின் மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை. அதனால் தான் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.