மீண்டும் இணைய போகும் தனுஷ், ஐஸ்வர்யா.. இப்படி ஒரு தோஷம் இருக்கா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிய போவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இதைக் கேட்ட சினிமா வட்டாரங்களில், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் பிரிவதற்கு என்னதான் காரணம் என பல வதந்திகள் இணையத்தில் உலாவியது.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரின் திருமணம் நடந்த போது பல விமர்சனங்கள் எழுந்தது. இவர்கள் இருவரும் நீண்டநாள் ஒற்றுமையாக வாழ மாட்டார்கள் என்று சொன்னவர்களுக்கு எடுத்துக்காட்டாக 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். தற்போது இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பால் பரஸ்பரமாக பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு குடும்பமும் இறங்கி உள்ளார்கள். இந்நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் விரைவில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைய போவதாக கூறி உள்ளார்.

அதுவும் இருவரும் ஒன்றாக திருப்பதி கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்கு சென்றுவிட்டு வந்து மீண்டும் இணைந்து வாழ போகிறார்கள் என பயில்வான் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அவருடைய அம்மா லதா ரஜினிகாந்த் வாழ்க்கை பற்றிய சில விஷயங்களையும், அறிவுரையும் கூறி உள்ளார்.

அதேபோல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் தனுஷுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் இரு குடும்பமும் இவர்களை திருப்பதி கோயிலுக்கு போய்விட்டு வர சொல்லி உள்ளார்கள். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கோயிலுக்குப் போக சம்மதித்துள்ளனர்.

இவர்கள் திருப்பதி சென்று விட்டு வந்தால் இவர்களுக்குள் மனமாற்றம் ஏற்பட்டு ஒற்றுமையாக வாழ முயற்சிப்பார்கள் என இரு குடும்பமும் நம்புகிறார்கள். அதேபோல் இருவரும் எப்பொழுது இணைவார்கள் என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.