மீண்டும் இணையும் ரங்கன் வாத்தியார் – கபிலன் கூட்டணி.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவும், ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியும் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரது கதாபாத்திரமும் மிகவும் பிரபலமானது. இதுதவிர இவர்கள் இருவரை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் இணையத்தில் உலா வந்தன.

இயக்குனர் ரஞ்சித்தில் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு மட்டுமின்றி நடிகர் ஆர்யாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. அதுவரை தொடர் தோல்வி படங்களை வழங்கி வந்த ஆர்யாவிற்கு இப்படம் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் சார்பட்டா படத்தில் ரங்கன் வாத்தியாராகவும், கபிலனாகவும் நடித்து அசத்திய ஆர்யாவும், பசுபதியும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம். ஆனால் இந்த முறை படத்தில் அல்ல வெப் தொடரில்.

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இந்த வெப் தொடரை இயக்க உள்ளார். ஷாமிக் தாஸ்குப்தாவின் தி வில்லேஜ் கிராபிக்ஸ் நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம்.

இதில் தான் ஆர்யாவும் பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் பணிபுரியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப குத்து விளக்கு படத்துக்கு மட்டும்தானா.. அல்ட்ரா மாடர்ன் உடையில் ஜெய்பீம் பட நாயகி

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் படம் ஜெய்பீம். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி வெளிவர இருக்கிறது. ...
AllEscort