மீண்டும் இணையும் அருவி பட கூட்டணி.. ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் இளம் இயக்குனர்கள் தங்கள் முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்துடன் களமிறங்கி ரசிகர்களின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பி விடுகிறார்கள். அந்த வகையில் மிகவும் கவனிக்கப்பட்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் அருண் பிரபு தான்.

அருவி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் அருண் பிரபு. தனது முதல் படத்திலேயே எய்ட்ஸ் என்ற நோய் உடலுறவால் மட்டும் பரவாது என தெளிவாக விவரித்து காட்டியிருந்தார். இப்படம் மூலம் பல விருதுகளை வென்ற அருண் பிரபு முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபுவின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் அருண் பிரபுவின் இரண்டாவது படமான வாழ் படம் வெளியானது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தது.

திரையரங்குகள் திறக்கப்படாததால், சோனி லைவ் ஓடிடியில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. உண்மையை கூறினால் படம் தோல்வி அடைந்தது என்று தான் கூற வேண்டும். தற்போது வாழ் படத்தின் தோல்விக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபு அவரது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டாராம்.

இப்படத்தை அருவி படத்தைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவே தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான கார்த்தி அல்லது சூர்யா இருவரில் யாரேனும் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் அருண் பிரபுவும் தனது வழக்கமான பாணியை விட்டு விலகி கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்க உள்ளாராம். இப்படமாவது இவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆண்டவருக்கே பாடமெடுக்கும் ஆக்சன் கிங்.. விஜய் டிவி கொஞ்சம் சர்வைவர் பார்த்து திருந்துங்க

பல முன்னணி தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்களை பல பெரிய நடிகர்களை வைத்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ...