மிடில்கிளாஸ் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய விசுவின் 7 படங்கள்.. அதிலும் நம்ம கண்ணம்மா அல்டிமேட்!

விசுவின் பெரும்பாலான படங்களில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாக எடுத்திருப்பார். அதே போல் இவருடைய படங்களை எல்லா கதாபாத்திரத்திற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இதனாலேயே விசுவின் படங்கள் வெற்றி பெறுகிறது. தாய்மார்களை கண்ணீர் விடச் செய்தும், வயிறு குலுங்க சிரிக்க செய்தும் எடுக்கப்பட்ட விசுவின் படங்களை பார்க்கலாம்.

மணல் கயிறு: விசு இயக்கத்தில் 1982 இல் வெளியான திரைப்படம் மணல் கயிறு. இப்படத்தில் எஸ். வி. சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, விசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் குடும்பத்துக்குத் தேவையான கருத்துக்களை நகைச்சுவை மூலம் சொல்லியிருந்தால் விசு. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

டௌரி கல்யாணம்: விசு இயக்கத்தில் 1983 இல் வெளியான திரைப்படம் டௌரி கல்யாணம். இப்படத்தில் விசு, விஜயகாந்த், ஸ்ரீவித்யா, எஸ் வி சேகர், விஜி ஆகியோர் நடித்துள்ளனர். வரதட்சணை கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டௌரி கல்யாணம் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சம்சாரம் அது மின்சாரம்: விசு இயக்கத்தில் 1986 இல் வெளியான திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இப்படத்தில் விசு, லட்சுமி, ரகுவரன், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுத்திருந்தார் விசு. இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படத்தில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் மனோரமா மிக அற்புதமாக நடித்திருப்பார்.

திருமதி ஒரு வெகுமதி: விசு இயக்கத்தில் 1987 இல் வெளியான திரைப்படம் திருமதி ஒரு வெகுமதி. இப்படத்தில் பாண்டியன், எஸ்வி சேகர், நிழல்கள் ரவி, விசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மனைவியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் படமாக இருந்தது. திருமதி ஒரு வெகுமதி படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பெண்மணி அவள் கண்மணி: விசு இயக்கத்தில் 1988 ல் வெளியான பெண்மணி அவள் கண்மணி படத்தில் பிரதாப் போத்தன், சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். இப்படம் 125 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

வேடிக்கை என் வாடிக்கை: விசுவின் இயக்கத்தில் 1990 வெளியான திரைப்படம் வேடிக்கை என் வாடிக்கை. இப்படத்தில் எஸ்.வி.சேகர், ரேகா, பல்லவி, மனோரமா, விசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் விசு தன் தங்கையின் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கும் பொறுப்பை ஏற்ற தாய் மாமனாக நடித்திருப்பார்.

பட்டுக்கோட்டை பெரியப்பா: விசு இயக்கத்தில் 1994 இல் வெளியான திரைப்படம் பட்டுக்கோட்டை பெரியப்பா. இப்படத்தில் ஆனந்த் பாபு, மோகினி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மாமியாரின் பேராசையால் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போகிறது. இதை அறியும் மணமகனின் பெரியப்பா பட்டுக்கோட்டையில் இருந்து வருகிறார். நின்றுபோன திருமணம் நடைபெறுகிறதா என்பதே இப்படத்தின் கதை.