மாஸ் நடிகருடன் இணையும் ராஜமௌலி.. கண்ணு முன்னாடி வந்துபோகும் பிரம்மாண்டம்.. சூப்பர் அப்டேட்

தெலுங்கு சினிமாவில் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் ராஜமெளலி. இவரது படங்களுக்கும் தெலுங்கில் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் மேலும் இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் ராஜமெளலியும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபுவும் புதிய படத்தில் இணைய உள்ளார்களாம். இந்த தகவலால் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மகேஷ் பாபு தற்போது இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆனால் இப்படம் மட்டும் வெளியாகவில்லை பிரபாஸின் ராதே ஷ்யாம், பவன் கல்யாணின் பீம்லா நாயக் ஆகிய படங்களும் போட்டியாக களமிறங்க உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் மகேஷ் பாபு அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் ராஜமெளலியுடன் கைகோர்ப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ஆவலாக உள்ளேன். விரைவில் படம் குறித்த தகவல்கள் வெளியாகும். நான் அடித்து கூறுகிறேன் நிச்சயம் இது மிகப்பெரிய படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் ராஜமெளலியும் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் பணிகளில் பிசியாக இருப்பதால் இவர்கள் இருவரும் அவரவர் படங்களை முடித்த பின்னர் இப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் படம் குறித்த தகவலும், அடுத்தாண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வரூப ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டவர்.. விக்ரம் ட்ரைலர் எப்படியிருக்கு?

தமிழ் ரசிகர்கள் பல மாதங்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ...