மாஸ்டர் பட வசூலை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்.. இது என்ன விஜய்க்கு வந்த சோதனை

தற்போதைக்கு தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் தளபதி விஜய் தான் என அவரது ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய வசூல் சாதனையை முறியடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது எப்படி நடந்தது என்பது ஆச்சரியம்தான்.

ரஜினி விஜய் வரிசையில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஹீரோவாக மாறி விட்ட சிவகார்த்திகேயன். இவர் எடுக்கும் ஒவ்வொரு புதிய முயற்சிகளுக்கும் வெற்றிகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டுமே 40 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க இந்த வருடம் அமெரிக்காவில் வெளியான தமிழ்ப் படங்களின் வசூலில் மாஸ்டர் திரைப்படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்து அதை தற்போது வரை அதிகபட்சமாக இருந்து வந்தது. மாஸ்டர் படமும் 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் விஜய்யின் மாஸ்டர் வசூலை தாண்டி அமெரிக்காவில் மட்டும் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வசூல் சாதனை செய்துள்ளது. இது எப்படி சாத்தியம் என விஜய் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சிதான். இங்க நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

மாநாடு பார்த்துவிட்டு சுரேஷ் காமாட்சிக்கு போன் போட்ட ரஜினி.. என்ன கூறினார் தெரியுமா.?

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பதுபோல் தாமதமாக வெளியானாலும் சிம்புவின் மாநாடு படம் நாலா பக்கமும் பாராட்டுகளை குவித்து வருகிறது. யாரும் எதிர்பாராத அளவிற்கு முதல் முறையாக சிம்புவின் படம் இந்த அளவிற்கு பாராட்டு ...